Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனாவால் விஜய், விக்ரம் பட நடிகர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த வெளியான கில்லி மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் நடித்திருந்தவர் நடிகர் ரூபன்.

கில்லி படத்தில் கபடி போட்டியின் அம்பையராகவும், விக்ரம் நடித்த தூள் படத்தில் ரயிலில் டி.டி.ஆராகவும் சிறு சிறு கதாபாத்திரங்களில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நடித்திருந்தார் ரூபன்

54 வயதாகும் நடிகர் ரூபன் நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்றும் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாக தான் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

இவரின் மரணத்திற்கு திரைத்துரையை சேர்ந்த பலரும் சமூக வலைதங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.