பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லோகேஷ் பாபு. இவருக்கு சில மாதங்களுக்கு முன் பக்கவாதம் வந்து மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இவருடைய மருத்துவ செலவுக்காக லட்சக்கணக்கில் பணம் தேவை என்று இவரது நண்பர் குட்டி கோபி சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.
இதன்பின், ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று, குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்திருந்தார். அப்போது முதலில் நடைபெற்ற ஆப்ரேஷனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் உதவினார்கள் அவரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் மண்டை ஓடு அறுவை சிகிச்சைகாக மருத்துமனையில் அனுமதிப்பட்டிருந்த லோகேஷுக்கு சிகிச்சை நலமாக முடித்து என புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.