Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் குடும்பத்தில் அரங்கேறிய சுப நிகழ்ச்சி - வெளிவந்த புகைப்படம்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

கொரோனா காரணமாக நின்றுபோன வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. அதற்கான புகைப்படம் கூட வெளிவந்திருந்தது. தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷாலினியின் அண்ணன் தான் நடிகர் ரிச்சர்ட்.

இவர் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் திருமண நாளில் தல அஜித்துடன் மொத்த குடும்பமும் எடுக்கத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்த மிகவும் வைரலாகி வருகிறது.