Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகளவில் இடம் பெற்ற முக்கிய நடிகர்! பிரபல நடிகரை பின்னுக்கு தள்ளிய ஹீரோ- லிஸ்ட் இதோ

சினிமா பிரபலங்களுக்கு உலகளவில் நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. அவர்களின் வருமானம், சொத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலை ஆங்கில இதழ் ஒன்று வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த பட்டியில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனராம். அவர்களில் பிரதமர் மோடி, கூகுள் சுந்தர் பிச்சை, எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்த மருத்துவர் ரவீந்திர குப்தா, சமூக சேவகர் பிலிகிஸ் தாதி மற்றும் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்துள்ளனராம்.

மேலும் இவர் சல்மான் கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அமிதாப் பச்சன் ஆகியோரையும் பின்னுக்கு தள்ளி 100 பேர் பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஆயுஷ்மான பெரும் கமிர்ஷியல் நடிகரும் கிடையாது. நல்ல கதைகளில் மட்டும் அவர் நடித்து வந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்ததோடு அந்தாதுன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.