கேட்கக்கூடாத செய்தியை கேட்டுவிட்டோம்! மனம் வருந்தி பிரபல பெண் - உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு
தரணி போற்றும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலாமானார். அச்செய்தி அவருக்காக பிராத்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடிபோல் இறங்கியுள்ளது.
காலை முதலே பதற்றமான சூழ்நிலை நிலவியது. அவரின் உடல் நலம் குறித்து இயக்குனர் பாரதிராஜா கண்ணீருடன் பேட்டியளித்த போதே நடக்கூடாதது நடைபெற்றுவிட்டது என தோன்றியது.
இந்நிலையில் பாடலாசிரியரான உமாதேவி சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
பெருத்த நம்பிக்கையோடுதான் காத்திருந்தோம் இயற்கையின் எல்லா பிரார்த்தனைகளோடும். கலைஞனுக்கோ கலைக்கோ இறப்பென்பது இல்லைதான் ஆயினும் கேட்கக்கூடாத செய்தியைக் கேட்டு மீளாதுரத்தில் கிடக்கிறோம். உங்கள் இரம்மிய குரல் எல்லோரின் துயரங்களையும் நனைத்துக்கொண்டே இருக்கிறது சர் #SPBalasubramaniam pic.twitter.com/xfaobAXcRh
— முனைவர். கு. உமாதேவி (@UmadeviOfficial) September 25, 2020