Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எஸ்.பி.பியின் இறுதி ஊர்வலத்தில் விஜய்- தளபதி மீது மரியாதை கூடுகிறது, ஏன் தெரியுமா?

கொரோனா நோய் தொற்று காரணமாக பிரபலங்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதை கொஞ்சம் தவிர்க்க வேண்டும் என அரசு கூறியிருப்பதாக தெரிகிறது.

காலங்களால் அழிக்க முடியாத பாடல்களை பாடி இப்போது நம்மைவிட்டு பிரிந்திருக்கும் எஸ்.பி.பி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சில பிரபலங்களே வந்தனர்.

எல்லோருக்கும் கொரோனா நோய் தொற்று காரணம் தான். இந்த நிலையில் பிரியமானவளே படத்தில் தனக்கு தந்தையாக நடித்த எஸ்.பி.பி அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என வந்தவர் தளபதி விஜய்.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது, இந்த நிலையில் பிரபலங்கள் இந்த சூழ்நிலையிலும் தளபதி வந்தது மரியாதைக்குரிய விஷயம் என அவரை கொண்டாடி வருகிறார்கள்.