Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு காத்திருந்த வரவேற்பு, இணையத்தில் செம ட்ரெண்டிங் வீடியோ..

நடிகர் சோனு சூட் மிக இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் தேவி 2 திரைப்படம் வெளியாகியிருந்தது, மேலும் விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த லாக்டவுன் சமயத்தில் நடிகர் சோனு சூட், பல்வேறு மக்களுக்கு பலவிதமான முறையில் உதவியுள்ளார்.

இதற்காக பலரும் அவரை பாராட்டி வந்தனர், மேலும் தற்போது தெலுங்கு திரைப்படமான அல்லுடு அதுரூஸ்

என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர்கள் அனைவரும் அவர் செய்த உதவிகளை பாராட்டி கைதட்டி, சால்வை அணிவித்து வரவேற்த்து உள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.