Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகர் தூக்குப் போட்டு திடீர் தற்கொலை- சிவகார்த்திகேயன் படத்தில் நடித்துள்ளாரா?

சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தில் ஒரு குட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் தென்னரசு.

இவர் அதன்பின் எந்த படங்களில் நடிக்க கமிட்டாகவில்லை. இந்த நேரத்தில் தான் அவரை பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

அதாவது இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

தென்னரசு குடித்துவிட்டு தனது மனைவியுடன் பெரிய சண்டையில் ஈடுபட்டுள்ளார். இன்று காலையில் பார்த்தால் அவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது போலீசார் நடிகரின் தற்கொலைக்கு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்களாம்.