வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கெட்டப் இப்படி தான் இருக்குமா? இந்த புகைப்படத்தை பாருங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். அசுரன் படத்தை தொடர்ந்து இப்படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் கூட சூர்யாவின் பிறந்தநாள் அன்று வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
இப்படத்தின் கதை வாடி வாசல் எனும் நாவலை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் என்பதை நாம் அறிவோம். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இப்படத்தில் சூர்யாவிற்கு இரண்டு கதாபாத்திரங்கள் என்றும் அதில் தந்தை மற்றும் மகன் என இரு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தந்தையின் கதாபாத்திரத்தின் லுக் இப்படி தான் இருக்கக்கூடும் என ரசிகர்கள் பேன் மேட் போஸ்டர் ஒன்றை வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது...