Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி - தனுஷ் அடுத்தடுத்து நடிக்கவுள்ள பிரமாண்ட படங்கள்

நடிகர் தனுஷ் தனது நடிப்பினால் திரையுலகில் மிக சிறந்த இடத்தை தன் வசம் பிடித்து வைத்துள்ளார்.

இவர் மட்டும் தான், தனது ரசிகனுக்காக மாரி, பட்டாஸ் போன்ற மாஸ் படங்களும் நடிப்பார். அதே சமையத்தில் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற அசுரன், வடசென்னை போன்ற கன்டென்ட் படங்களையும் நடிப்பார்.

இந்நிலையில் இவர் அடுத்தடுத்து நடித்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன, அது யாருடைய இயக்கத்தில் என்று இங்கு பார்ப்போம்...

ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் மற்றும் அத்ராங்கி ரே உள்ளிட்ட படங்களில் ஏற்கனவே தனுஷ் நடித்து வருகிறார். இதில் ஜகமே தந்திரம் படம் ரிலீசிற்கு காத்திருக்கிறது.

1. D43 - கார்த்திக் நரேன் இயக்கத்தில் - 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்

2. ராம் குமார் இயக்கத்தில் D45 - 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்

3. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44

4. வெற்றிமாறன் இயக்கத்தில் D46