Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித் வாங்கிய முதல் சம்பளம் - இவ்வளவு தானா

தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் மத்தியிலும், உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி, கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகர், அஜித் குமார்.

இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.

மேலும் இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து இயக்கி வருகிறார்.

அஜித் தற்போது நடித்து வரும் படங்களுக்கு சுமார் ரூ.40 - 50 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் தல அஜித் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூ.2,500 என தெரியவந்துள்ளது.