நடிகர் சிம்பு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வந்த மாநாடு படத்தில் நடித்து வந்தார். அவரின் படத்தை விட அவரின் திருமணத்தை தான் குடும்பத்தினர் மட்டுமல்லாது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவருக்காக அண்மையில் ரத்தினகிரி முருகன் கோவிலில் கூட ரசிகர்கள் மண்டியிட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமண ஸ்தலமான உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
முகமூடியும் தலையில் தொப்பியும் அணிந்த படி அவர் வந்திருந்ததால் பலராலும் அவர் சிம்பு தானா என கண்டுபிடிக்க முடியாவில்லை.
மீனாட்சி அருளால் சிம்புவின் திருமணம் விரைவில் நடைபெறட்டும்.