பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனை கடந்த 2000 ல் மும்பையில் உள்ள அலுவலகத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தில் அவரை சுட்டது பிரபல ரவுடி சுனில் கைக்வாட் தான் என தெரிந்த பிறகு அவரை போலிச்சார் கைது செய்தனர். அக்குற்றவாளி மீது 11 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்கும் இருக்கின்றன.
ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ரவுடி சுனில் பரோலில் வெளிவந்து போலிசாரின் பிடியில் இருந்து தப்பினான். இதனால் சுனிலை போலிசார் மீண்டும் பொறிவைத்து கைது செய்துள்ளனராம்.
ராகேஷ் ரோஷன் ஹிந்தி சினிமாவின் ஹீரோ ஹிரித்திக் ரோஷனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.