Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி! விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.

லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க பொருத்தமாக இருக்கும் என லோகேஷ் பிரவீனை அழைத்தாராம். விஜய்யுடன் ஆரம்பகாட்சிகளில் 25 நிமிடம் பிரவீன் நடித்துள்ளாராம்.

அப்பச்சி கிராமம் படத்தின் பாடலை பார்த்த விஜய் நீண்ட முடியில் அழகாக இருப்பதாகவும், நீளமாக முடி வளர்க்கும் படியும் கூறினாராம். இதனால் பிரவீன் ஊரடங்கு காலத்தில் நீளமாக முடி வளர்த்துள்ளாராம்.

வாழ்த்துக்கள் பிரவீன்...