Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள திரைப்படம் குறித்து வெளியான புதிய தகவல், தற்போதைய நிலை இதுதானாம்.

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர், இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று திரைப்படங்களும் ப்ளாக் பஸ்டர் ஆனது.

மேலும் கடந்த வாரம் தளபதி விஜய்யை சந்தித்து முதல் பாதியில் ஒரு சில மாற்றங்களை செய்துவிட்டு முழுக்கதையையும் கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ், அதை கேட்டுவிட்டு ஓகே கூறியுள்ளார் விஜய்.

இதனால் தளபதி 65 அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கியுள்ளது. எப்போது படப்பிடிப்புக்குச் செல்கிறோமோ அப்போது அறிவித்துக் கொள்ளலாம் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது எனவும் கூறபடுகிறது.