Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்ற நடிகர் - சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த சப்ரைஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களால் தலைவர்காவும் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடித்து 1990ஆம் ஆண்டு வெளியான படம் அதிசய பிறவி. இதில் ரஜினியுடன் இணைந்து மாற்றுத்திறனாளி நடிகர் கிங் காங் நடித்திருப்பார்.

ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகளை நம்மால் எளிதழாவில் மறந்துவிட முடியாது. ஆம் ரஜினியின் டேப்ரிகார்டர் பாடலுக்கு அருமையாக பிரேக் டான்ஸ் ஆடுவார் கிங்காங்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் நடிகர் கிங்காங். இதற்காக தொலைபேசி மூலம் அழைத்து அவருக்கு வாழ்த்து கூறி சப்ரைஸ் கொடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.