தளபதி விஜய்யின் பிட்னஸ்க்கு இது தான் காரணமா! இதுவரை பலரும் கண்டிராத விஜய்யின் ஒர்க் அவுட் வீடியோ, இதோ..
தளபதி விஜய் தற்போது தமிழ் மிக பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார், இவருக்கு இந்திய அளவில் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது, அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் தனது வீட்டின் மொட்டை மாடியில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, அந்த வீடியோவை பார்க்கையில் கில்லி அல்லது மதுரை திரைப்படத்தில் நடிக்கும் போது எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.
மேலும் அவரின் ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து, அவர் இப்போதும் பிட்டாக இருப்பதற்கு இது தான் கரணம் என கூறிவருகின்றனர்.
தலைவனோட இளமையின் ரகசியம் 😻❤️ @actorvijay #Master pic.twitter.com/M9AGHGyARP
— MaayoN 🎭🕴️ᴹᵃˢᵗᵉʳ (@itz_satheesh1) October 10, 2020