Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாநகராட்சிக்கு எதிராக சூப்பர் ஸ்டார் ரஜினி நடவடிக்கை! மனுதாக்கல்

கொரோனா ஊரடங்கால் சினிமா வட்டாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. சினிமா படங்கள் வழக்கம் போல வெளியாகும் சூழல் வந்தால் தான் இயல்பு நிலை திரும்பும். இதனால் அத்துறையை நம்பி பணியாற்றும் பலரும் வருமான இழப்பை சந்தித்து பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. 50 அல்லது 100 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்பதால் திருமணம் போன்ற நிகழ்சிச்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணம் மண்டபங்களும் மூடப்பட்டுக்கிடந்தன.

மின் கட்டணம், வீட்டு வாடகை, சொத்து வரி என பல விசயங்களில் மக்களுக்கு சிக்கல் எழுந்தது. இந்நிலையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி ரூ 6.50 லட்சம் வரி விதித்துள்ளது.

இதனால் அவர் ஏப்ரல் முதல் செப்டம்பர் காலத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்த பொது முடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடப்படாமல் காலியாகவே இருந்தது. எனவே சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.