Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிப்ட் திரைப்படத்திற்காக கடுமையான பயிற்சியில் இறங்கிய பிக்பாஸ் கவின், புகைப்படத்துடன் இதோ..

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கவின்.

அதனை தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கவின்.

அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் பிரபலமானார். அந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டத்தை கொண்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்தபின் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார், இப்படத்தில் அவருடன் பிகில் பட நடிகை அமிர்தாவும் நடிக்கின்றார்.

இந்நிலையில் இப்படத்திற்காக தற்போது கவின் தீவிர நடன பயிற்சியில் இறங்கியுள்ளார், ஆம் இது குறித்து நடன பயிற்சியாளர் சதிஷ் ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.