நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு திருமணம் முடிந்தது- ஜோடியின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் தம்பி கோட்டை என்ற படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியவர் ஆர்.கே. சுரேஷ்.
இதுவரை 4 படங்கள் தயாரித்துள்ளார், ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் மூலம் அதிக படங்கள் விநியோகம் செய்துள்ளார்.
தயாரிப்பு, விநியோகம் செய்வதை தாண்டி இப்போது நடிகராகவும் வலம் வருகிறார்.
இன்னொரு பக்கம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது இவருக்கு திருமணம் நடந்துள்ளது, அந்த புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என பதிவு செய்துள்ளார்.
அதோடு தங்களது திருமண புகைப்படத்தையும் டுவிட்டரில் போட்டுள்ளார். ஆனால் பெண் யார், பெயர் என்ன என்ற விவரமும் தெரியவில்லை.
எனினும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்.