1 வருடமாக படுத்த படுக்கையில் இருந்த ஆரி- பிக்பாஸ் வீட்டில் செய்த வேலை, பாராட்டும் ரசிகர்கள்
பிக்பாஸ் 4 சீசனில் இவர் டைட்டில் ஜெயிப்பார் என்று நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஆரி. வெளியில் இருக்கும் வரை அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல பெயர் உள்ளது.
நிகழ்ச்சியை முடிந்து வரும்போது நல்ல பெயரோடு வருகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது அவர் பற்றி யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று வந்துள்ளது.
அதாவது அவருக்கு காலின் முட்டியில் அடி ஏற்பட்ட அறுவை சிகிச்சை செய்தாராம். 6 மாதமாக படுத்த படுக்கையில் இருந்த அவரால் 1 வருடமாக நடக்க கூட முடியவில்லையாம்.
அதில் இருந்து மீண்ட அவர் பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்கில் வேல்முருகன் அவர்களை முதுகில் ஏற்றி 1 மணி நேரத்திற்கும் மேலாக நின்றுள்ளார்.
இது அவரது ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது, பாராட்டுக்களும் அவருக்கு குவிகிறது.
We stand with #aari and support him always...@rameshlaus@itisprashanth@LMKMovieManiac@dhanushkraja@sekartweets@Dhananjayang@Siva_Kartikeyan@MSPMovieManiac pic.twitter.com/rboxSGjADE
— aariarujunanfans (@aariarujunanfa1) October 20, 2020