Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பெயர் இது தானா! வெளியான வேற லெவல் அப்டேட் இதோ..

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் சிம்பு பின் சில காரணங்களால், அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கிராமப்புறத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக நடிகர் சிம்பு சுமார் 20 கிலோ வரையிலான தனது எடையை குறைத்துள்ளார், அதுமட்டுமின்றி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் பெயர் ‘சம்பவம்’ என்ற புதிய தகவல் வெளியகையுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.