Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றிமாறன் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்தால் இப்படித்தான் இருக்கும், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் போஸ்டர் இதோ..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைபடங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது, இது வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எப்போதோ தொடங்கிவிட்டது.

அதற்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் போஸ்டர்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒன்று செம ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..