Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

மேலும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது.

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

மேலும் இதில் தல அஜித் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை, ஆனால் மற்ற நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என கூறப்படுகிறது.