Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்த கத்தி பட வில்லன், எதற்காக தெரியுமா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி.

இப்படம் வெளியாவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், பின் வெளியாகி 12 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார், அவருடன் சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ் தனது பேஸ் புக் பக்கத்தில், கத்தி படத்தில் அவர் நடித்த புகைப்படத்தை பதிவிட்டு.

"இது எந்த படத்தின் புகைப்படம்? மேலும் இந்த படம் 6 வருடத்திற்கு முன் வெளியானது, சூப்பர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்" என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.