தளபதி விஜய்க்காக வைத்திருந்த கதையில் நடிகர் சூர்யா, சன் பிக்சர்ஸின் அடுத்த திரைப்படத்தில் அதிரடி மாற்றம்!
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பார் என எதிர்பார்ப்படுகிறது.
நடிகர் சூர்யா சூரரை போற்று திரைப்படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இதற்காக தனது கெட்டப்பை மாற்றி வருகிறார் சூர்யா.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிப்பார் என்றும் இதனை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கதையில் தான் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.