ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ..
எஸ்.எஸ்.ராஜமௌலி இந்திய திரையுலகே போற்றும் ஒரு மிக பெரிய இயக்குனராக கருதப்படுபவர், பாகுபலி திரைப்படங்களின் மூலம் இவர் உலகெங்கிலும் பிரபலமானார்.
இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இரண்டு டீசர்களும் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில் இப்படத்தில் தமிழ் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து ரசிகர் ஒருவர் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஆம் ராமராஜு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவையும், பீம் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியையும் வைத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.
Concept design of #RRRMovie 1st Look Kollywood version@Suriya_offl - #AlluriSitaRamaraju 🔥@Karthi_Offl - #KomaramBheem 🌊
— Ranjith Editz (@Ranjith_Offl_) October 23, 2020
Hope all like it!#SooraraiPottruOnPrime #Sulthan #RRR @ssrajamouli pic.twitter.com/h7voR0qhIn