Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொரோனா சமயத்தில் கூட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கும் தல அஜித், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது, சென்னையில் நடிகர் கார்த்திகேயாவின் படப்பிடிப்பு பணிகளை நடத்தினர்.

மேலும் தற்போது வலிமை படக்குழுவினர் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளனர், அங்குள்ள ராமோஜி ராவ் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித்தும் சென்னையிலிருந்து அங்கு செல்லவுள்ளார், மேலும் தனது 20 நாட்களுக்கான முழு படப்பிடிப்பை முடிக்கவுள்ளார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் தல அஜித் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பெரிய ஹீரோ, இதனால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.