Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : தனுஷ் - ராம்குமார் இணையும் திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா?

இயக்குனர் ராம்குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குனர். இவர் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்தது நடிகர் விஷ்ணு - ராம்குமார் கூட்டணியில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று பிளாக் பஸ்டர் ஆனது.

அதன்பின் இயக்குனர் ராம்குமார் - நடிகர் தனுஷ் கூட்டணியில் ஒரு பேண்டஸி திரைப்படம் உறுதியானது. மேலும் இதற்காக கடந்த இரண்டு ஆண்டாக ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வந்ததாம்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை வரும் ஜூன் மாதம் 2021 தொடங்க திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். மேலும் நமது சினிஉலகம் சார்பில் விசாரித்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.