வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி.. தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படங்கள்..

நடிகர்கள் by Karthik
Topics : #Dhanush #Movies

தமிழ் சினிமாவில் உருவத்தை மட்டுமே வைத்து மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ்.

திரையுலக பயணத்தின் துவக்கத்தில் பல சரிவுகளை சந்தித்தாலும் தற்போது இந்திய சினிமாவில் இருந்தே தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார்.

தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் தற்போது புகழ் பெற்ற நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதையும் தற்போது ஹாலிவுட்டில் கூட நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் அடுத்துதடுத்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படங்களுக்கு பின் பல வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்த்து பிரபமாண்ட படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

பட்டியலின் விவரம் :

தனுஷ் 43 = கார்த்திக் நரேன் இயக்கம்

தனுஷ் 44 = மித்ரன் ஜவகர் இயக்கம்

தனுஷ் 45 = ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கம்

தனுஷ் 46 = ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கம்

தனுஷ் 47 = வெற்றி மாறன் இயக்கம்

இதில் தனுஷ் 46 படம் குறித்து மட்டும் தான் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.