Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் கையில் ஏற்பட்ட படுகாயம்! ரசிகர்கள் கவலை.. வெளியான வலிமை படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்..

எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.

கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

இதில் சமீபத்தில் தல அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தல அஜித்தின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் தல அஜித்தின் கையில் அடிப்பட்டு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. இது படப்பிடிப்பின் போது ஆனதா? அல்லது வெளியில் இருக்கும் போது ஏற்பட்டதா? என ரசிகர்கள் கவலையுடன் கேட்டு வருகின்றனர்.

இதோ தல அஜித் லேட்டஸ்ட் லுக் புகைப்படம்..