தல அஜித்தின் ட்ரெண்டிங் புகைப்படத்தில், அவருடன் கைபோட்டு புகைப்படம் எடுத்திருக்கும் அந்த நபர் யார் தெரியுமா?

நடிகர்கள் by Jeeva

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் பெரிய சாதனைகள் படைத்து வருகிறது.

மேலும் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹைதராபாதத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் தல அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு கலந்து கொண்டார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது தல அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. தல அஜித்துடன் இருக்கும் அந்த நபர் தான் வலிமை திரைப்படத்தில் பைக் ஸ்டாண்ட்ஸ் உள்ளிட்ட காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ மேலும் சில புகைப்படங்கள்..