மறைந்த நடிகர் சேதுவிற்காக சந்தானம் செய்த விஷயம்- பிறந்தநாளில் இப்படி ஒரு விஷயம் செய்துள்ளாரா?

Topics : #Santhanam #Sethu

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு அதிகம் வந்தவர் நடிகர் சேது.

மருத்துவ துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம், அதை நடிகர் சந்தானம் நிறைவேற்றிக் கொண்டார்.

நல்ல நண்பர்களான இருவரும் அடுத்தடுத்து படம் நடிக்க தான் இருந்தனர். ஆனால் அதற்குள் சேது அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மார்ச் 26ம் தேதி உயிரிழந்தார்.

சேதுவின் பிறந்தநாளான இன்று ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது. அதாவது ECR ல் சேதுவின் Zi Clinic புதிதாக திறக்கப்பட்டுள்ளது, அதை சந்தானம் அவர்கள் தான் செய்துள்ளாராம். அவரே தனது டுவிட்டரிலும் அறிவித்துள்ளார்.