நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவாகிவிட்டதா? வெளியான சூப்பர் தகவல்..

நடிகர்கள் by Jeeva
Topics : #Ajith Kumar

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் பெரிய சாதனைகள் படைத்து வருகிறது.

மேலும் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹைதராபாதத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் தல அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ளார். ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புதிய படங்கள் இணையத்தில் தீயாய் பரவின.

இந்நிலையில் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை இறுதி சுற்று, சூரரை போற்று திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்த அதிகரைபுரவமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.