தல அஜித் நடித்த பில்லா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்..

நடிகர்கள் by Karthik

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் மற்றும் தளபதி விஜய் என்று தான் உடனடியாக நினைவிற்கு வரும்.

இதில் ரஜினிகாந்த் நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தை மீண்டும் 27 வருடங்களுக்கு பிறகு ரிமேக் செய்து நடித்து வெற்றி கண்டார் தல அஜித்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு பில்லா படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. இதில் அஜித்தின் வருகையை ஏற்று பில்லா படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் இரு முன்னணி நட்சத்திரங்கள் சந்தித்து கொண்ட நேரத்தில் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இதுவரை நாம் யாரும் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.