உலகநாயகனுக்காக எழுதிய கதை, தலைப்பு வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினி - பின்னர் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டானது. எந்த திரைப்படம் தெரியுமா?

நடிகர்கள் by Jeeva

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வரலாறு.

நடிகர் அஜித் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வெளியான இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆனது. மேலும் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கமலை வைத்து தெனாலி திரைப்படத்தை இயக்க காத்து கொண்டு இருந்தார், அப்போது கமல் ஹேராம் படத்தில் நடித்து கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் கமலுக்காக எழுதிய சில கதைகளில் ஒன்று தான் வரலாறு. அதன்பின் கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்த ரஜினியிடம் அவர் வரலாறு திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார்.

அதற்கு ரஜினி "இப்படத்தை கமல் பண்ணாவிட்டால் நான் நடிக்கிறேன்" என்றார், மேலும் ரஜினி இப்படத்திற்கு மதனா எனவும் தலைப்பு வைத்துள்ளாராம்.

ஆனால் பின்னர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் அஜித்தை வைத்து இயக்கியுள்ளார்.