சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 49-வது பிறந்தநாளை எங்கு எப்போது கொண்டாடினார் தெரியுமா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

நடிகர்கள் by Jeeva
Topics : #Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார். இவரின் திரைப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு உண்டு.

கடைசியாக இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியானது, மிக எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் வசூலில் சொதப்பியது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவாவுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 49-வது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் படையப்பா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.