100 கிலோவில் இருந்த சிம்பு, மெலிந்த தோற்றத்திற்கு மாறியது இதனால் தான்.. கண்கலங்கிய சிம்பு.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார், இப்படத்திற்காக செம பிட்டாக மாறியுள்ளார் சிம்பு.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டானது, மேலும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் தொடங்கும் முன் நடிகர் சிம்பு 101 கிலோவில் இருந்தாராம், பின் தனது கடின பயிற்சியால் 71 கிலோவிற்கு வந்துள்ளார். தனது உடலில் இருந்த 30 கிலோவை மிக குறைந்த நாட்களிலே குறைத்துள்ளார்.
சிம்புவின் இந்த கடினமான பயிற்சிக்கு தூண்டுகோலாக இருந்ததே அவரின் ரசிகர்கள் தானாம், ஆம் இது குறித்து சிம்பு சொல்லும் போது "இதை நான் எனது ரசிகர்களுக்காக தான் செய்கிறேன்" என கண்கலங்கிய படி பயிற்சியாளரிடம் பேசியுள்ளார்.