ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான 5 திரைப்படங்களின் பட்ஜெட் என்ன தெரியுமா? இத்தனை கோடிகளா..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு உண்டு.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்து வரும் ரஜினி, தற்போதும் கூட பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான 5 திரைப்படங்களின் பட்ஜெட் என்ன விவரங்களை தான் பார்க்கவுள்ளோம்.
* தர்பார் - 200 கோடிகள்
* பேட்ட - 160 கோடிகள்
* 2 பாயிண்ட் 0 - 570 கோடிகள்
* காலா - 140 கோடிகள்
* கபாலி - 100 கோடிகள்