தீபாவளி அன்று ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிக பெரிய அப்டேட், என்ன தெரியுமா? சூப்பர் தகவல் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக உள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி, பின்னர் பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பியது.
மேலும் இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை தீபாவளி என்பதால் அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக அப்டேட் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரஜினி ரசிகர்களுக்கு, இந்த அண்ணாத்த திரைப்படத்தின் அப்டேட் மிக பெரிய விருந்தாக அமையும்.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.