தசாவதாரம் படத்தில் கமலுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. நீங்கள் இதுவரை பாத்திரத்தை புகைப்படம்.. இதோ
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்து வெளியான பிரமாண்ட திரைப்படம் தசாவதாரம்.
இப்படத்தில் பிராமணன், விஞ்ஞானி, வயதான பாட்டி, பாடகர், சி.பி. ஐ அதிகாரி, மற்றும் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட மாறுபட்ட 10 வேடங்களில் நடித்திருந்தார் கமல்.
இந்த 10 வேடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ் என்று இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ' கமல் 60 ' நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தசாவதாரம் படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசன் ஜார்ஜ் புஷ் கதாபாத்திரத்தில் நடித்திக்கொண்டிருக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்த் ஜார்ஜ் புஷ்ஷை பார்க்க வேண்டும் என்று படப்பிடிப்பு சென்றுள்ளார்.
அப்போது ஜார்ஜ் புஷ் வேடத்தில் நடித்து கொண்டிருக்கும் கமல் ஹாசனுடன், ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ...