நடிகர் கார்த்தியின் அடுத்த படம்.. இயக்குனர் இவர் தான்.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..
தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆம் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க போவது இயக்குனர் மித்ரன். இவர் இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைவுள்ளார். இந்த அறிவிப்பு நடிகர் கார்த்தியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
. @Karthi_Offl’s next starts rolling on the auspicious Diwali day ( Last year his BB #Kaithi released for Diwali). Produced by @lakku76's @Prince_Pictures
— Rajasekar (@sekartweets) November 14, 2020
Directed by @Psmithran
Music by @gvprakash#Karthi_PSMithran #PrincePictures4@AntonyLRuben @george_dop pic.twitter.com/1b2KCdoSFM