Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அண்ணாத்த திரைப்படம் குறித்து அப்படத்தில் பணியாற்றிய முக்கிய பிரபலம் கூறிய தகவல், என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா என பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். கொரோனா காரணமாக தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தீபாவளி அன்று இப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ள ரூபன் ரசிகர்களின் பிறந்தநாள் பதிவிற்கு நன்றி கூறி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அண்ணாத்த படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் அண்ணாத்த திரைப்படத்தின் அப்டேட்ஸ் விரைவில் வரும் என்றும், தானும் அதற்கு தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.