தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு, இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
சமீபத்தில் இவர் தனது உடல் எடையில் 30 கிலோ வரை குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று, ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மேலும் அப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிம்பு தனது கெட்டப்பை மாற்றி வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் இந்த வேகத்தை கண்டு அவரின் ரசிகர்கள் திகைத்து போய் உள்ளனர்.
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இது குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த வார இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.