Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அப்பா அம்மாவாக நடித்த அவரை விட வயது குறைந்த நடிகர்கள், எந்த படத்தில் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.

அந்த வகையில் மிக பெரிய எதிர்பார்ப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான இவரின் தர்பார் திரைப்படம் தோல்வியை தழுவியது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படம் அப்போது மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் இப்படத்தில் தான் அவருக்கு அப்பா அம்மா மணிவண்ணன் மற்றும் வடிவுக்கரசி நடித்திருப்பார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர்களுக்கு மகனாக நடித்த ரஜினி (1950) ஆண்டு பிறந்தவர்.

ஆனால் மணிவண்ணன் - (1953) ஆண்டும், வடிவுக்கரசி - (1955) ஆண்டும் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.