Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து விமானத்தில் பயணம் செய்த நடிகை நயன்தாரா.. புகைப்படத்தை பாத்தீர்களா

தமிழ் சினிமாவில் நடிகர்களில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அதே போல் நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்து படம் சந்திரமுகி. பி. வாசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தான் நயன்தாராவிற்கு தமிழில் இரண்டாவது திரைப்படம்.

இப்படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து திரைப்படம் குசேலன். இதன்பின் இருவரும் இணைந்து நடித்து திரைப்படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார்.

தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நான்காம் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகை நயன்தாரா விமானத்தில் ஒன்றாக பயணம் செய்து புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அண்ணாத்த படத்தின் போது எடுக்கப்பட்டது என்று சிலரால் கூறப்படுகிறது.