நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் இப்படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை எல்லாம் குறைத்து ஆச்சார்ய படுத்தினார்.
மேலும் கடந்த தீபாவளி அன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தில் சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சிகள் உரிய அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டதால். அப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நீக்க கோரி விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.