Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 500 கோடி நஷ்ட ஈடு! 2.0 வில்லன் நடிகரின் அதிரடி நடவடிக்கை! சர்ச்சையாக்கிய சம்பவம்!

சூப்பர் ஸ்டார் ரஜியுடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் அக்‌ஷய் குமார். பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

சமுதாய நல உதவிகளை அதிகம் செய்து வரும் அவர் அண்மையில் கொரோனா நிவாரண பணிகளுக்காகக்காவும், சினிமா ஊழியர்களுக்காகவும் தாராளமாக நிதியுதவி அளித்தார்.

அவரின் நடிப்பில் அண்மையில் லட்சுமி பாம் படம் வெளியானது. இப்படத்தில் அவர் திருநங்கையாக நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களே இப்படத்தால் அவருக்கு கிடைத்தது.

அண்மையில் பாலிவுட் சினிமா நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் சுஷாந்த் காதலி ரியா கனடாவுக்கு தப்பிச்செல்ல அக்‌ஷய் குமார் தான் உதவினா என யுடுயூப் சேனல் ஒன்று தகவல் வெளியிட செய்தி தீயாக பரவியது.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் அந்த சானல் உரிமையாளர் ரஷீத் சித்திக் மீது தன்னை பற்றி அவதூறு பரப்பியதற்காக வழக்கு பதிவு செய்ததுடன் ரூ 500 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.