ரசிக்க வைத்த எடிட் வீடியோ! பிரபல நடிகரை ரவுடி பேபி பாடலுக்கு ஆட வைத்த நெட்டிசன்கள்!
மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிட்டது. மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றும் அண்மையில் 1 பில்லியன் பார்வைகளை எட்டி மிகப்பெரும் சாதனையை Youtube ல் செய்தது.
ஏற்கனவே இப்பாடல் மூலம் படக்குழுவுக்கு ரூ 8 கோடி வருமானம் கிடைத்தது. இதை தனுஷ் பாடலில் பணியாற்றிவர்கள் அனைவருக்கும் பகரிந்தளித்து விருந்து உபசரித்தார்.
தனுஷ், சாய் பல்லவியின் நடனம் அனைவரையும் ஈர்த்தது. தற்போது நெட்டிசன்கள் இப்பாடலுக்கு தெலுங்கில் சாய் பல்லவி, நானி ஜோடி ஆடிய MCA படத்தின் நானி காரு பாடல் வீடியோவை அமைத்து எடிட் செய்து அசத்தியுள்ளனர். இது ரசிகர்களை குதூகலமாக்கியுள்ளது.
MCA ft. Maari 2. #RowdyBaby
— Parotta Master (@ikaipullai) November 19, 2020
Dedicated to @Sai_Pallavi92 😍 pic.twitter.com/4wIqB2uq2h