முகமூடி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜீவா கிடையாதாம்.. வேறு யார் தெரியுமா
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் முகமூடி. இப்படத்தின் மூலமாக தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக் டே.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆம் இப்படத்தின் மூலம் நடிகர் ஜீவா தனது திரையுலக பயணத்தில் ஒரு சரிவை சந்தித்தார்.
இந்நிலையில் முகமூடி திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜீவா கிடையாதாம். இப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் தேர்ந்தெடுத்த முதல் ஹீரோ நடிகர் சூர்யா தான்.
ஆனால் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம் நடிகர் சூர்யா. அதன்பின் ஜீவா இப்படத்தில் ஹீரோவாக நடித்து படம் வெளியானது.